குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி ₹6.30 கோடி மோசடி..!!

குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த  வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2021, 11:53 AM IST
குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி ₹6.30 கோடி மோசடி..!! title=

பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மருமகன் பிரவீண் அலெக்ஸாண்டர் வயது 31 மற்றும் அவரது கூட்டாளிகளான  அருண் ஐஸ்கிரீம் டீலர் கவுதமன் வயது 29 இவர்கள் முந்தரி, பாண்டிச்சேரி நாவல்குளம் பகுதியைச் சேர்ந்த முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட பொருட்கள் மொத்த வியாபார டீலர் கணேசகுமார் வயது 33 உள்ளிட்ட மூவரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கிய தருவதாக கூறி 6.30 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

புகாரின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் சொந்தமாக வியாபாரம் செய்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் பாலாஜி தங்கம், வெள்ளி, கார், செல்போன் ஆகியவற்றை பில் இல்லாமல் 2nd business செய்து வருவதாகவும், இவருடைய அப்பாவான இரண்டாவது எதிரி துளசிதாஸ் என்பவர் IAS அதிகாரியாக இருப்பதாகவும், அவருக்கு சாஸ்திரி பவனில் சுங்கவரித்துறையில் பணிபுரியும் ஒரு Gr1 அதிகாரி நன்றாக தெரியும் என்றும் அவர் ஏர்போர்ட்டில் பிடிக்கும் தங்கத்தை குறைந்த விலைக்கு கொடுப்பார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் பாலாஜி அவருக்கு தெரிந்த தினேஷ் என்பவரிடம் தெரிவிக்க அவர் பாண்டிச்சேரியை சேர்ந்த கணேஷ்குமார் என்ற புகார்தாரரிடம் கூறியதால் முதலில் 6 லட்சம் ருபாய் கொடுத்து தங்கம் வாங்கியுள்ளார்.

ALSO READ ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

பிறகு மீண்டும் எதிரிகள் தங்களிடம் நிறைய தங்கம் இருப்பதாகவும் 6.50 கோடி பணம் கேட்க அதற்கு புகார்தாரர் அவருக்கு தெரிந்த நபர்களிடமும் தெரிவித்து சுமார் 4 நபர்கள் சேர்ந்து மொத்தம் 6 கோடியே 30 லட்சம் ருபாய் திரட்டி பாண்டிச்சேரியில் வைத்து குற்றம்சாட்டப்பவர்களிடம் கொடுக்க அதனை கடந்த 4 மாதத்திற்கு முன்பு, பாலாஜி என்பவர் வாங்கிக்கொண்டு தங்கத்தையும், பணத்தையும் இதுவரை கொடுக்காததால் பாண்டிச்சேரியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சென்னை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனை அடுத்து, துணை ஆணையர் கீழ்பாக்கம் அவரின் உத்தரவில் வேப்பேரி காவல் ஆய்வாளர் மற்றும் கீழ்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலிசார் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பாலாஜி (வயது 34), துளசிதாஸ் ( வயது59), மகேஷ் (வயது 45), மாதவரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (வயது 43) ஆகிய 4 பேரையும் அவரவர் வீட்டிலிருந்து அழைத்து வந்து 4ஆம் தேதி முதல் வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களை வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ ’செமஸ்டரில் 90% பேர் தோல்வியா?’ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News