பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.. ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

Local Holiday Erode: புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 22, 2024, 11:08 AM IST
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.. ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை title=

Erode Latest News: ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெறவுள்ளதால், வரும் மார்ச் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா செய்தி வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக மார்ச் 30ம் தேதி வேலை நாளாக இருக்கும் என ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் படிக்க - நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம்!

இவர்களுக்கு விடுமுறை கிடையாது

அதேநேரத்தில் தேர்வுகள் நடைபெறும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு விடுமுறை பொருந்தாது. மேலும், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதே வேளையில் மாவட்ட கருவூலம் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். தற்போது பங்குனி மாதம் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாா்ச் 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மாா்ச் 19ம் தேதி திருகம்பம் சாட்டுதலும் கொண்டாடப்பட்டதுக். வரும் 25ம் தேதி இரவு தீக்குண்டம் வாா்ப்பும், 26ம் தேதி குண்டம் விழாவும் நடைபெறவுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. 

மேலும் படிக்க - பொன்முடி வழக்கு: ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கெடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News