உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Dec 21, 2019, 09:19 AM IST
உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு! title=

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ததமிழகத்தின்ன 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில், 3 ஆயிரத்து 643 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. மேலும் 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 76 ஆயிரத்து 746 பதவியிடங்களுக்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 847 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 1,994 வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டன. மேலும் 18 ஆயிரத்து 818 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுனர். 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் 9 ஆயிரத்து 624 பதவியிடங்களுக்கு 54 ஆயிரத்து 757 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 753 வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்து 983 வேட்பு மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 410 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்து 611 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

Trending News