கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் கருத்து கேட்டால் நடவடிக்கை!

அதிமுகவை பற்றி அங்கீகரிக்க படாதவர்களிடம் கருத்து கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊடகங்களுக்கு அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது!

Last Updated : Jun 13, 2019, 01:54 PM IST
கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் கருத்து கேட்டால் நடவடிக்கை! title=

அதிமுகவை பற்றி அங்கீகரிக்க படாதவர்களிடம் கருத்து கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊடகங்களுக்கு அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது!

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி செய்தித்தொடர்பாளர்கள் உட்பட யாரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கூடாது என, அக்கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டது.

இந்தநிலையில், அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தித்தொடர்பாளர்களை தவிர மற்றவர்களிடம் கருத்து கேட்க வேண்டாம், என ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு அதிமுக பொறுப்பேற்காது எனவும், இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த வேண்டாம் எனவும் ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Trending News