சட்டப்பேரவை நிகழ்வுகள் : அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்..முதல்வருக்கு எதிராக பதாகைகள்!

TN Assembly Happenings 2024 : தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர், நேற்று கூடியதை அடுத்து வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 21, 2024, 12:15 PM IST
  • சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024
  • அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்
  • சுவாரஸ்ய நிகழ்வுகள் என்ன?
சட்டப்பேரவை நிகழ்வுகள் : அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்..முதல்வருக்கு எதிராக பதாகைகள்! title=

TN Assembly Happenings 2024 : தமிழக சட்டப்பேரவைக்கூட்டத்தொடர், நேற்று கூடியதை அடுத்து வரும் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து, அரசின் மெத்தன போக்கை கண்டிக்கும் வகையில் ஆதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி உள்பட, பல்வேறு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைத்தொடரில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மீதான விவாதங்கள் நடைபெற இருந்தது. 

இதையடுத்து, கருப்பு சட்டையுடன் அதிமுகவினர் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தொடருக்கான விவாதங்கள் நடைப்பெற்ற போது, அதிமுகவினரும் பாமகவினரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெளியில் நின்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 'ரிசைன் ஸ்டாலின்' எனும் பதாதைகளை வைத்துக்கொண்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்..காரணம் என்ன?

கள்ளச்சாராயம் சம்பந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகள், சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதனால் விவாதம் எழுந்ததை தொடர்ந்து சபா நாயகர் அப்பாவுவின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். 

அதிமுகவினருக்கு தடை!

“அதிமுக  உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் பயன்படுத்திய வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. அப்படி அவை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளை ஊடகங்கள் தனது அனுமதியின்றி ஒளிபரப்பவோ, வெளியிடவோ கூடாது” என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். 

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் முழுவதும் சட்டசபை நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறி அவர்களை சஸ்பெண்ட் செய்தார். “வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகம் மட்டுமின்றி தலைமைச் செயலக வளாகத்திலும் அவர்களை அனுமதிக்க வேண்டாம்” என சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் பேச்சு:

“தமிழக முதல்வர் இந்த சட்டப் பேரவை பொறுத்தவரைக்கும் ஜனநாயகம் மாண்பு தலைதோங்க வேண்டும் அதில் நான் உறுதியாக இருக்கிறேன் அவை மீறி செயலில் ஈடுபட்டதால் அவை தலைவர் விதி எண் 120 இன் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டிருக்கிறார் இருந்தபோதிலும் இந்த மானிய கோரிக்கை காலையிலும் மாலையிலும் நடைபெறுவதால் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் உத்தரவிடுமாறு  கோரிக்கை வைக்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

பெருந்தன்மையோடு முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார் ஆகையால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த அதிமுகவினர் ஆளுநரிடம் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாமக கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய அறிவிப்புகள் என்ன? முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News