Pongal 2025: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, தமிழ் மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் சங்கராந்தி எனவும் அழைக்கப்படுகிறது. தை மாதம், சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் தினம், மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் பெயர்ச்சி 2025: வரும் ஜனவரி 14-ஆம் தேதி அன்று, மகர சங்கராந்தி தினத்தில், தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் சஞ்சரிப்பார். பொங்கல் திருநாளான அன்று, தை மாத நன்னாளில், சில தானங்கள் செய்வதால், பொங்கல் பரிசாக வாழ்க்கையில் அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். இவை உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கும் சிறந்த பரிகாரங்களாக இருக்கும்.
2025ம் ஆண்டில், பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும். இந்நாளில், நீராடுதல் முதல் பொங்கல் படைத்து சூரிய பகவானை வணங்குதல் என வரை அனைத்து ஆன்மீக செயல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், ராசிக்கு ஏற்ப பொருட்களை தானம் செய்யவதால், பொங்கல் பரிசாக உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகும்.
மேஷம்: மகர சங்கராந்தி நாளில் வெல்லம், கடலை, எள் ஆகியவற்றை தானம் செய்வது மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்தது. இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.
ரிஷபம்: தைப் பொங்கல் மகர சங்கராந்தி திருநாளில் ரிஷபம் ராசிக்காரர்கள் வெள்ளை வஸ்திரம், தயிர், எள் தானம் செய்வதன் மூலம் உடல் நலம் பேணுவதுடன், பல வகையில் பிரச்சனைகளில் வெற்றியும் பெறலாம்.
மிதுனம்: தொல்லைகளில் இருந்து விடுபட மிதுன ராசிக்காரர்கள் மகர சங்கராந்தி தினத்தன்று நிலவேம்பு கஷாயம், அரிசி மற்றும் போர்வை தானம் செய்ய வேண்டும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு மங்களகரமான பலன்கள் கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் அரிசி, வெள்ளி மற்றும் வெள்ளை எள் தானம் செய்வதால் சுப பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கி, செய்யும் தானம் பன்மடங்கு பலன்களைத் தரும்.
சிம்மம்: பொங்கல் பண்டியான மகர சங்கராந்தி தினத்தன்று சிம்ம ராசிக்காரர்கள் தாமிரம், கோதுமை போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் நீங்கி, சச்சரவுகளில் இருந்து விடுபடலாம்.
கன்னி: தைப் பொங்கல் நன்னாளில் கன்னி ராசிக்காரர்கள் அன்னதானம் செய்வது சிறந்தது. சர்க்கரைப் பொங்கலை ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம். போர்வை மற்றும் பச்சை ஆடைகளை தானம் செய்வதும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை நீக்கும்.
துலாம்: மகர சங்கராந்தி தினத்தன்று துலாம் ராசி உள்ளவர்கள் ஏழைகளுக்கு சர்க்கரை, போர்வை போன்ற வெள்ளை நிற பொருட்களை தானமாக வழங்கினால், திருமண வாழ்வில் இனிமை அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சியும், மங்களமும் உண்டாகும்.
விருச்சிகம்: மகர சங்கராந்தி தினத்தன்று விருச்சிக ராசிக்காரர்கள் பவளம், சிகப்பு வஸ்திரம், எள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இந்த தானங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தனுசு: மகர சங்கராந்தி தினத்தன்று, தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் துணி, மஞ்சள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
மகரம்: மகர சங்கராந்தி மகர ராசிக்காரர்கள் கருப்பு போர்வை, எண்ணெய் மற்றும் எள் தானம் செய்ய வேண்டும், இதனால் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது, மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.
கும்பம்: பொங்கல் பண்டிகை அன்று, கும்ப ராசிக்காரர்கள் சூரியனை மகிழ்விக்க கருப்பு துணி, உளுத்தம் பருப்பு, பொங்கல் மற்றும் எள் ஆகியவற்றை தானம் செய்வது நன்மை பயக்கும்.
மீனம்: பொங்கல் பண்டிகை அன்று, மீன ராசிக்காரர்கள் பட்டு வஸ்திரம், உளுத்தம்பருப்பு, அரிசி மற்றும் எள் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும், இது சூரியனின் ஆசீர்வாதத்தைப் பெற்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற இது உதவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.