Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காமல் போவதற்கான முக்கிய காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
ரேஷன் கார்டில் (Ration Card) இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக சிலருக்கு கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) கிடைக்க வாய்ப்பு இல்லை. அது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காமல் போவதற்கு ரேஷன் கார்டுகளில் இருக்கும் பிரச்சனையும் காரணம். தகுதிவாய்ந்த பெண்கள் இருந்தும் எங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் ஏன் கிடைக்கவில்லை என சிலருக்கு கோபமான கேள்வி இருக்கலாம். அதற்கு உங்கள் ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் உரிமைத் தொகை பெற தமிழ்நாடு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு பெண்ணுக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது. தகுதி வாய்ந்த பெண்கள் இருவர் இருந்தாலும் அதில் ஒருவருக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
அதேபோல், ஒரு ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்கள் யாரும் அரசின் மற்ற ஓய்வூதியங்களை பெறக்கூடாது. முதியவர்கள் யாரேனும் ஓய்வூதியம் பெற்று வந்தால் அவர்களது குடும்ப பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.
எனவே, பெரும்பாலான வீடுகளில் முதியோர் உதவித் தொகை வாங்கி வருகின்றன்றனர். அவர்கள் பெயர் நிச்சயம் ரேஷன் கார்டில் இருக்கும். அதனையே முதியோர் உதவித் தொகை விண்ணப்பத்துக்கு ஆணவமாகவும் கொடுத்திருப்பார்கள்.
அப்படியான சூழலில், அதிகாரிகளின் கள ஆய்வில், உங்கள் ரேஷன் கார்டில் இருப்பவர்கள்முதியோர் உதவித் தொகை வாங்குவதை உறுதிசெய்திருப்பார்கள். அதனாலேயே உங்களின் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கும். இந்த விதிமுறையின் கீழ் நீங்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
அதேநேரத்தில் பார்கிசன் நோய், முதுகு தண்டுவட நோய் உள்ளிட்ட மிகப்பெரிய வாழ்வியலை முடக்கும் நோய்களை உடைய குடும்பத்தினருக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவர்களுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது. ஒருவேளை ஓய்வூதியம் பெறுவதால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் பரிசீலனை செய்து உங்கள் விண்ணப்பத்தின் உண்மை தன்மை சரியாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலைஞர் உரிமைத் தொகை வழங்க உத்தரவிடப்படும். எனவே, இதுவரை கலைஞர் உரிமைத் தொகை தங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த பிரச்சனை இருக்கிறதா? என ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.