Healthy habits Tamil | படித்தவர்கள் அதிகம் இருக்கும் இன்றைய சூழலில் அலுவலக வேலையாளாக பெரும்பாலானோர் மாறிவிட்டனர். அவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இதனால் மலச்சிக்கல் வருவது முதல் மன அழுத்தம் வருவது வரை என பல ஆரோக்கிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அலுவலக வேலையில் இருக்கும்போது பல செய்யக்கூடாத தவறுகளையும் செய்கிறோம். உதாரணத்துக்கு நாள் முழுவதும் திரையின் முன் அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல், அதிகப்படியான காபி சாப்பிடுகிறோம். இது உங்கள் ஆரோக்கியத்துக்கு மிக மிக ஆபத்தை கொடுக்கக்கூடிய விஷயம். இந்த பழக்க வழக்கம் நமது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே நீங்கள் அலுவலகம் முடிந்ததும் நிம்மதியாக தூங்க விரும்பினால், இந்த 5 பெரிய தவறுகளை செய்யாதீர்கள்.
1. நீண்ட நேரம் திரையில் வேலை செய்தல்
அலுவலகத்தில் மணிக்கணக்கில் கணினித் திரையின் முன் அமர்ந்திருப்பது கண்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தூக்கத்திற்கும் ஆபத்தானது. திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் ஹார்மோனைத் தடுக்கிறது. வேலை முடிந்ததும் திரையைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சிக்கவும்.
2. கூடுதல் நேரம் வேலை
பலர் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். அதாவது, தங்கள் பணி அட்டவணையை முறையாகப் பின்பற்றுவதில்லை. இது உடலின் இயற்கையான சர்க்காடியன் முறை எனப்பபடும் தூக்கம்-விழிப்பு சுழற்சியை பாதிக்கிறது. இந்தச் சுழற்சி தொந்தரவு செய்யும்போது, நீங்கள் சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதில் சிரமத்தை உணர்கிறீர்கள்.
3. காபி உட்கொள்ளல்
மக்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் அதிகமாக காபி அல்லது டீ அருந்துகிறார்கள். குறிப்பாக மதியம் அல்லது மாலையில் காஃபின் உட்கொள்வது உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும். எனவே மாலை 4 மணிக்குப் பிறகு காஃபின் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
4. மன அழுத்தம்
அலுவலக மன அழுத்தமும், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யும் பழக்கமும் உங்கள் மன அமைதியைப் பறித்துவிடும். மன அழுத்தம் காரணமாக மனதிற்கு ஓய்வு கிடைக்காது, இது தூக்கத்தைப் பாதிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்க, தியானம் செய்ய வேண்டும், சிறிய இடைவேளை அடிக்கடி எடுப்பது நன்மை பயக்கும்.
5. உடல் செயல்பாடு இல்லாமை
அலுவலகத்தில் நாள் முழுவதும் நாற்காலியில் அமர்ந்திருப்பது உடலின் சக்தியைக் குறைக்கிறது. மேலும் நீங்கள் சோர்வாக உணர தொடங்குவீர்கள். தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே உங்கள் தினசரி வழக்கத்தில் சிறிது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | டாக்ஸிக் அலுவலகத்தில் செய்யவே கூடாத 5 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க | போகி அன்று ‘இந்த’ 7 பொருட்களை எரிக்கவே கூடாது!! என்னென்ன தெரியுமா?
(பொறுப்பு துறுப்பு: இந்தச் செய்தியைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதற்கு பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்காவது படித்திருந்தால், அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நிச்சயமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ