சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி!!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி!!

Last Updated : Mar 24, 2019, 07:54 PM IST
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி!! title=

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி!!

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகம், புதுச்சேரியில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவகங்கை தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் வெளியிட்ட 10 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் கார்த்தி சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

Trending News