கார்த்திகை தீபத்திருவிழாவை: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையில் நாளை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

Last Updated : Dec 9, 2019, 08:00 AM IST
கார்த்திகை தீபத்திருவிழாவை: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் title=

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையில் நாளை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர்.

Trending News