சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்: 400 பேர் பங்கேற்பு

கிண்டியிலுள்ள மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 09:49 PM IST
  • கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
  • மாற்றுத்திறானாளிகளுக்கு இந்தச் சமூகம் துணை நிற்க வேண்டும்
  • மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டம்
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்: 400 பேர் பங்கேற்பு  title=

காலை 9.30 மணிக்குத் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறானாளிகள் பங்கேற்றனர். 18-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறானாளிகளுக்குத் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க | ரயில்வேயில் வேலை, +2 படித்திருந்தால் போதும்: இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

இந்நிகழ்வினை, சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன் IRS குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இம்மையத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு)  சங்கீதா பற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சார்தக் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி மேலாளர் மாலதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் உதவிப் பேராசிரியர் ஜெர்ரி உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தொடக்க விழாவில் பேசிய சுங்கத்துறை துணை ஆணையர் பூ.கொ.சரவணன் IRS, “மாற்றுத்திறானாளிகளுக்கு இந்தச் சமூகம் துணை நிற்க வேண்டும். பெற்றோர்களும், நண்பர்களும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆர்வத்துடன் வந்து பங்கேற்ற அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய, துணை இயக்குநர் (பொறுப்பு)  சங்கீதா பற்குணன், மத்திய அரசின், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு சேவை மையம் மூலமாக,  அனைத்துவித மாற்றுத்திறனாளிகளுக்காக இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாமை மாவட்டம் தோறும் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க |  டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News