மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்; ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிலாந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எட்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். முன்னதாக, இன்று காலை பத்து மணிக்கு வாலாஜா சாலை வழியாக பேரணி நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதே போன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.