ஜல்லிக்கட்டு: போராட்டத்தில் ஐ.டி., ஊழியர்கள் - வீடியோ

Last Updated : Jan 18, 2017, 06:26 PM IST
ஜல்லிக்கட்டு: போராட்டத்தில் ஐ.டி., ஊழியர்கள் - வீடியோ title=

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  ஐ.டி., ஊழியர்கள், வணிகர்கள் போன்றோர் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டைட்டில் பார்க்கில் நடைபெற்ற போராட்ட வீடியோவை பாருங்கள்:

Trending News