திராவிடர்களாக ஒன்றிணைவது அவசியம் - பா. இரஞ்சித்

திராவிடர்களாக ஒன்றிணைவது அவசியம் என்று இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 29, 2022, 07:25 PM IST
  • திராவிடர்களாக ஒன்றிணைவது அவசியம்
  • மதுரையில் பா. இரஞ்சித் பேச்சு
  • தலித் வரலாற்று மாத நிகழ்வு
திராவிடர்களாக ஒன்றிணைவது அவசியம் - பா. இரஞ்சித் title=

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக  கலைத்திருவிழா, ஓவிய கண்காட்சி, திரைப்பட விழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று தலித் எழுத்தாளர்களுக்கான , தலித் இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 29,30 தேதிகளில் மதுரை உலகத் தமிழ் சங்கம் அரங்கில் இன்று தொடங்கியது.

Pa Ranjith

இந்த நிகழ்ச்சியி பேசிய இரஞ்சித், “ தலித் எழுத்துக்கள்தான் என் திரைப்பயணத்தின் தொடக்கம். உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தின் வாயிலாகவும் என் வாழ்வின் வாயிலாகவும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. 

மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா

வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னி பிணைந்தது. இலக்கியவாதிகளே எங்களின் வேர்ச்சொல். 

Pa Ranjith

90களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தது. இப்போது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத்தொடங்கியுள்ளது. அந்த வகைமையை சுய மதிப்பீடு செய்ய இக்கூடுகை உதவும். 

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பௌத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற தொடங்கியுள்ளன.'இன வரைவியல்' என்ற வகைமையை உருவாக்கிய பெரும் பங்கு தலித் இலக்கியத்திற்கு உண்டு” என்றார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களைவிட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது.எனவே, இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரம்ஜானும் ஒரு திராவிட மாடல்தான் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன்” என்று பேசினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News