தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 11:15 AM IST
  • வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பி இல்லத்தில் வருமான வரி சோதனை.
  • சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
  • காமராஜ் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது.
தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி! title=

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.  கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார், இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.  கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | என்னயா பண்ணி வச்சு இருக்கீங்க! போக்குவரத்து மாற்றத்தால் திணறும் சென்னை வாசிகள்!

இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார்.  இங்கு 5-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவரது இல்லத்திலும் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

velumani

இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.  இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது.  மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.  முன்னதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வேலுமணி வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 

மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News