சென்னை: நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவணமான எஸ்.பி.கே கண்ஸ்ட்ரக்ஷன்ஸ் அருப்புக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகம் மதுரை சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என ஐந்து இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நேற்றும் ஸ்.பி.கே கண்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்ததி வருகின்றனர். நேற்று செய்யாதுரை மகன்களின் சொந்தமான வீடுகள், கல்குவாரி உள்ளிட்ட சுமார் எட்டு இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
முக்கிய ஆவணங்கள் சிக்கின
சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித் துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா அல்லது தற்போது அதிமுக ஒற்றை தலைமை பிரச்சணையில் அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியது
அதிமுக அரசின் எடப்பாடி ஆட்சி காலத்தில் எடப்பாடி சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து செய்யாத்துரை நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2018 ஆம் ஆண்டு இங்கு ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR