அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Dec 10, 2019, 03:05 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு..!  title=

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைபெய்தது. இதேபோல் செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழைபெய்தது. இதேபோல் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது வருகிறது. 

இந்நிலையில், இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, இன்று மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதியில் நிலவி வருவதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.... 
இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் வளிமல்ணட மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.  

 

Trending News