சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், முற்றாக ஒழிக்கவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாவை, முடிந்த அளவு பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது.
முகக்கவசம் அணியும் பழக்கம் அனைவரிடமும் வரவில்லை, அப்படியே கவசத்தை அணிந்தாலும், அதை சரியாக உரிய முறையில் அணிவதில்லை என்ற குறை இருந்து வந்தது. இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் (ICMR) மேற்கொண்ட ஆய்வில் சென்னையில் 40% மக்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிவதாக தெரிவிக்கிறது. அதாவது, சரியான முகக்கவசத்தை உரிய முறையில் அணியும் பழக்கம் சென்னையில் மேம்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு கூறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (Greater Chennai Corporation) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemiology) இணைந்து மேற்கொண்ட ஆய்வில் சென்னை மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
Also Read | DGHS on Mask: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை
32 குடிசைப் பகுதிகள் மற்றும் 32 குடிசைஅல்லாத பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் சென்றுக் கொண்டிருந்த 3,200 தனிநபர்கள் மற்றும் கடைகள், மருந்தகம், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் இருந்த 1,280 நபர்களளிடம் ஜூலை மாதம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களில் 41% மக்கள், குடிசையில்லாத வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களில் 47 சதவிகிதத்தினரும் உரிய முறையில் முகக்கவசங்களை அணிவது இந்த ஆய்வில் தெரியவந்தது.
தொற்றுநோய் காலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிடும் போது இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வுகள், அக்டோபர் 2020, டிசம்பர் 2020, மார்ச் 2021 மற்றும் ஜூலை 2021 என நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டன.
மளிகை மற்றும் காய்கறி கடைகள், மருந்தகங்கள், மத இடங்கள், ஆடை விற்பனை கடைகள் என பல இடங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு அல்லது வணிகப் பகுதிகள், சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் என வெளிப்புற பொது இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்படி, குடிசைப்பகுதிகளில் 38% மற்றும் பிற பகுதிகளில் 25% மக்கள் வெளியில் இருக்கும்போதும் முகக்கவசங்களை அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
முகக்கவசம் அணிவது தொடர்பான கடந்தகால கணக்கெடுப்புத் தகவல்களின்படி, குடிசைப் பகுதிகளில் 28% மற்றும் பிற பகுதிகளில் 36% மக்கள் மட்டுமே கொரோனா பாதிப்பை தவிர்க்க முகக்கவசங்களை பயன்படுத்தினார்கள். அதேசமயம் மால்களில் தான் 57% பேர் முகக்கவசங்கள் அணிவதாக கூறப்பட்டுள்ளது. இதுதான் முகக்கவசம் அணியும் இடங்கள் என்ற வகையில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | உங்கள் முகக்கவசம் உண்மையில் கவசமாக இருக்க இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள்
இது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகக் காணப்பட்டாலும், சென்ற வார இறுதியில், சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளது என்பது கவலை தருவதாகவே உள்ளது.
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்பியதும், பெரிய நிறுவனங்கள் 100% அளவில் செயல்படுவதாலும், உணவகங்கள், மால்கள், சந்தைகள், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆபத்து பெரியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோவிட் -19 விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து சுகாதாரத் துறை வல்லுநர்கள் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read | Mask Free Countries: இந்த நாடுகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR