நான் கருணாநியின் மகன்; ஒருபோதும் தன்மானத்தை இழக்க மாட்டேன்: MKS

Last Updated : Dec 1, 2019, 03:12 PM IST
நான் கருணாநியின் மகன்; ஒருபோதும் தன்மானத்தை இழக்க மாட்டேன்: MKS title=

மண்புழுவைப் போல் நெளிந்து போய் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

புதுக்கோட்டை மாலையீடு அருகே, திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு-வின் மகள் திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பின்னர், விழாவில், உரையாற்றினார். மிசா சட்டத்தில் தாம் கைது செய்யப்பட்டது குறித்து சிலர் தவறாக பேசுவதாகவும், அதற்காக தாம் வேதனைப்படுவதாகவும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் மிட்டாய் கொடுத்து திமுக வெற்றிப்பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்புடையது என்றால், அண்மையில் நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவும் மிட்டாய் கொடுத்துதான் வெற்றிப்பெற்றதாக, கருதலாமா என்றும், மு.க.ஸ்டாலின் வினவினார்.

அது போல் பொங்கல் பரிசு திட்டத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அரிசி அட்டைக்கு மட்டும் என அரசு பாரபட்சம் பார்க்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலமான உண்மைகளை பாஜகவின் அரசகுமார் வெளிப்படையாக கூறிவிட்டார். மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது. நானும் ஸ்டாலின் 1989-ல் எம்எல்ஏவாக ஆனோம். இன்று நான் முதல்வராகிவிட்டேன் என எடப்பாடி கூறி வருகிறார். ஊர்ந்து சென்று யாருடைய காலையும் பிடித்து கொண்டு முதல்வர் ஆக வேண்டிய அவசியம் எனக்கில்லை.

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு போனது உண்மைதான் என்றும், இடஒதுக்கீடு சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத்தை திமுக நாடியதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒருபோதும், நீதிமன்றத்தை, திமுக நாடவில்லை என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். 

முதலமைச்சர் பதவி குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கும் மு.க.ஸ்டாலின் பதலளித்தார். முன்னதாக, திருமண விழாவில் பேசிய பாஜக தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் பி.டி.அரசக்குமார், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தாம் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். காலம் கனியும் என்றும், அப்போது, ஜனநாயக முறைப்படி முதலமைச்சர் அரியணையில், மு.க.ஸ்டாலின் அமர்வார் என்றும், பி.டி.அரசகுமார் தெரிவித்தார்.  

 

Trending News