Tamilnadu Government Disabled Women Schemes | பெண்களுக்காக பல சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளி பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி பெண்கள் கர்ப்பம் அடைந்தது முதல் நிதியுதவி கொடுக்கிறது தமிழ்நாடு அரசு. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் கருச்சிதைவு ஏற்பட்டால் அதனை கலைக்கவும் தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திட்டங்கள்
தமிழ்நாடு அரசு கர்ப்பம் அடைந்த மாற்றுத் திறனாளி பெண்களுக்கான நிதியுதவி வழங்குகிறது. பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு என மூன்றுக்கும் நிதியுதவி கொடுக்கிறது தமிழ்நாடுஅரசு. பிரசவத்திற்கு 6000 ரூபாய், கருச்சிதைவு ஏற்பட்டால் ஆயிரம் ரூபாய், கருக்கலைப்புக்கு 3000 ரூபாய் நிதியுதவி கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!
தகுதி
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியும். அதனால் மாற்றுத் திறனாளி பெண்கள் உடனடியாக மாற்றுத் திறனாளி அட்டைக்கு விண்ணப்பித்து, இந்த அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் தாய்மை அடையும்போது அல்லது தவிர்க்க முடியாத சூழலில் கருச்சிதைவு ஏற்படும்போது மாற்றுத் திறனாளிகள் அட்டையை வைத்து நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளி பெண்கள் பிரசவ நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் முறை
1. தாய்மை அடைந்த மாற்றுத் திறனாளி பெண்கள் பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு நிதியுதவி பெற ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்பப்படிவம் இருக்கிறது.
2. https://chennai.nic.in/ta/differently-abled-welfare-schemes/ என்ற இணைய பக்கத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும்
3. முகப்பு பக்கத்தில் இருக்கும் ’துறைகள்’ பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களைத் தேர்வுசெய்து, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களைத் தேர்வுசெய்து கிளிக் செய்யவும்.
5. அதில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரிய திட்டங்கள் என்ற பிரிவில், "பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரசவம்/கருச்சிதைவு/கர்ப்பத்தை நிறுத்துவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
6. அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து, செயலாளர், தமிழ்நாடு தொழில்சார் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண் 718, டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற விண்ணப்பிக்க வேண்டிய முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
திருமண பதிவுச் சான்றிதழ், குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மருத்துவர் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பிற திட்டங்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூகநலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிருக்கு இலவச பஸ், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ நிதியுதவி திட்டம், கைம்பெண், விதவைகள் நிதியுதவி திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், இலவச மருத்துவ சிகிச்சை, பெண்களுக்கான தொழில்முனைவோர் கடனுதவி திட்டம் என எல்லா மட்டத்திலும் சூழ்நிலையிலும் இருக்கும் பெண்களுக்காக பல சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ