தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School Leave: தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 14, 2023, 09:12 PM IST
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
  • இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • வேறு எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?  title=

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் குறைவான அளவே பெய்த மழை, தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் கனமழை பெய்ததால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

நாளை எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது?

தற்போது வரை, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை இன்றளவும் விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும், இன்று புதிதாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என்பதால், தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் எந்தெந்த இடங்களில் மழையால் பாதிப்பு?

சென்னையின் முக்கிய சாலைகள் கனமழையால் நீர் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அவசர உதவி எண்கள் அறிவிப்பு:

கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழக அரசு கட்டணமில்லா அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள், 1913 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 044 25619206 , 044 25619207 மற்றும் 044 25619208 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, மழை நீர் தேங்கியிருப்பது போன்ற புகார்களை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் இது குறித்த புகார்களை தெரிவிக்க #Chennairains, #Chennaicorporation உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுருத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை: அபராதம் ரூ.1768 மட்டும்தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News