17 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கினார் தமிழக கவர்னர்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. 

Last Updated : Nov 29, 2017, 10:25 AM IST
17 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கினார் தமிழக கவர்னர் title=

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பட்டயங்கள் வழங்கினார். இதில் 17 ஆயிரம் மாணவர்-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம்-பட்டயங்களை வழங்கினார்.

கனடாவில் வான்கூவரில் அமைந்துள்ள காமன்வெல்த் கல்வி கழகத்தின் ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவருக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வீரலட்சுமி என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

Trending News