நீர் மேலாண்மையில் அரசின் சாதனைகளை மறைக்கப்படுகிறது!

நீர் மேலாண்மையில் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், அதிமுக அரசின் சாதனைகளை திமுக மூடி மறைக்கப் பார்க்கிறது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Last Updated : Sep 15, 2019, 10:41 AM IST
நீர் மேலாண்மையில் அரசின் சாதனைகளை மறைக்கப்படுகிறது! title=

நீர் மேலாண்மையில் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், அதிமுக அரசின் சாதனைகளை திமுக மூடி மறைக்கப் பார்க்கிறது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., மத்திய அரசில் அங்கம் வகித்தும், மாநிலத்தில் பல ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை போன்றவற்றுக்கு சிறு முயற்சியும் மேற்கொள்ளாத திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அதிமுக அரசின் நீர் மேலாண்மையின் செயற்கரிய செயல்பாடுகளைப் பற்றி குறை கூறியுள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் செயல்படும் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட தொடர் சட்டப் போராட்டத்தால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் கிடைத்து, மாநிலத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய் களை தூர்வாரும் பணி ரூ.61 கோடியில் மேற்கொள்ளப்பட்டு கடைமடை வரை காவிரி நீர் சென்றடைந்த விவரம் செயதித் தாள்களில் வந்ததை திரு.துரை முருகன் ஏன் கவனிக்கவில்லை? இவ்வரசின் நீர் மேலாண்மை பணிகளை, திமுக எத்தகைய பொய்களை கொண்டு மறைக்க முயன்றாலும், மக்கள் அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News