Today Rasipalan: இன்று ஜனவரி 14ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆலோசனைகளால் தெளிவுகள் ஏற்படும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : நெருக்கடிகள் குறையும். பரணி : தெளிவுகள் ஏற்படும். கிருத்திகை : ஆதாயம் மேம்படும்.
வித்தியாசமான சிந்தனைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அரசு குறித்த சில நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் கிருத்திகை : சாதகமான நாள். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள். திருவாதிரை : மேன்மை உண்டாகும். புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.
தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் புனர்பூசம் : சிந்தனைகளில் கவனம். பூசம் : விழிப்புடன் செயல்படவும். ஆயில்யம் : மாற்றமான நாள்.
அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களின் கற்பித்தலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : இழுபறிகள் மறையும். பூரம் : அறிமுகம் கிடைக்கும். உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடினமான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொன், பொருட்ச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான செயல்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும். சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
பொருளாதார மேன்மையால் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான பணிகளில் அலைச்சல் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கர்வமின்றி செயல்படுவது மேன்மையை உருவாக்கும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும். சுவாதி : மேன்மையான நாள். விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
புதிய தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம் விசாகம் : தன்னம்பிக்கை மேம்படும். அனுஷம் : வெற்றிகரமான நாள். கேட்டை : தடைகள் விலகும்.
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம். மூலம் : கவனம் வேண்டும். பூராடம் : ஆதரவான நாள். உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். தாமதம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும். திருவோணம் : வேறுபாடுகள் நீங்கும். அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் அவிட்டம் : திறமைகள் வெளிப்படும். சதயம் : புரிதல் உண்டாகும். பூரட்டாதி : வரவுகள் உண்டாகும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். ரேவதி : ஆசைகள் நிறைவேறும்.