முன்னாள் MP அர்ஜுனன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மோதல்: வைரலாகும் வீடியோ

இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் மற்றும் சண்டை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2020, 10:38 AM IST
  • கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை தாக்க முயன்ற முன்னாள் MP.
  • முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன்.
  • Ex-MP அர்ஜுனன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மோதல் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் MP அர்ஜுனன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மோதல்: வைரலாகும் வீடியோ title=

சேலம்: இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் மற்றும் சண்டை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. 

நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus In Tamil Nadu) தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை (Chennai) உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால், இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் 24 மணி நேரமும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு விதியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்தி படிக்க | பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு

இதற்கு மத்தியில், கொரோனா (Coronavirus) தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை தாக்க முயன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சேலம் (Salem) ஓமலூரில் போலீசார் இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு, அவர், "நான் முன்னாள் எம்.பி., என்னிடமே ஆவணத்தை கேட்கீறியா, என காரிலிருந்து இறங்கி போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் தகாதா வாரத்தைகளை பயன்படுத்தினார். 

மேலும் செய்தி படிக்க | கொரோனா பதற்றத்தை போக்க மனம் திறந்து பேசுங்கள்... -இராமதாசு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் (K Arujunan) மீண்டும் காரில் அமர்ந்து, புறப்படுவதற்கு தயாரான நிலையில், மீண்டும் கீழே இறங்கி வந்து, காவல் அதிகாரியை தள்ளிவிட முயன்றார். பதிலுக்கு காவல் அதிகாரியும் ஓங்கி அவரை தாக்கினார். பின்னர் முன்னாள் எம்.பி. அர்ஜுனன் உதவி காவல் ஆய்வாளரை காலால் எட்டு உதைத்தார். இதையடுத்து பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து முன்னால் MP அர்ஜுனன் காரில் புறப்பட்டு சென்றார்.

Trending News