பா.ஜ.க யாரையும் தூண்டி விடவில்லை, மாணவிக்கு நியாயம் வேண்டும்: விஜயசாந்தி

மாணவி தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தமானது. மதத்தை மாற்ற கோரி யாரையும் கட்டாயபடுத்தக் கூடாது: விஜயசாந்தி

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 08:23 PM IST
பா.ஜ.க யாரையும் தூண்டி விடவில்லை, மாணவிக்கு நியாயம் வேண்டும்: விஜயசாந்தி title=

அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி வீட்டில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்த குழு தனது விசாரணையை நடத்தியது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குழு பின்வரும் விவரஙளிஅ தெரிவித்துள்ளது. 

குழுவின் சார்பில் தெலுக்கானா முன்னாள் எம்.பி நடிகை விஜயசாந்தி பேசினார். ‘மாணவி தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தமானது. மதத்தை மாற்ற கோரி யாரையும் கட்டாயபடுத்த கூடாது. இந்த வற்புறுத்தல் ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்றுள்ளது. எனினும், கடைசி வரை மாணவி மதம் மாறமாட்டேன் என உறுதியாக இருந்துள்ளார். மாணவி இறப்பதற்க்கு முன்பு பேசியுள்ளதை தமிழ்நாடே பார்த்துள்ளது. பா.ஜ.க மதத்தை பாட்டி ஓட்டு வாங்க எந்த அவசியமும் இல்லை. லாவண்யாவிற்க்கு நடந்த இந்த சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் தான் அந்த பெண் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் சிந்திப்பார்கள். இது குறித்து ஏன் முதல்வர் பேசவில்லை? அவருக்கு இந்துக்களின் ஓட்டு வேண்டாமா? முதல்வர் ஏன் மவுணமாக உள்ளார்?  இந்த தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என திசை திருப்புகின்றனர். இது போன்ற சம்பவம் நாளை மீண்டும் யாருக்கும் நடக்க கூடாது. முதல்வர் இது பற்றி பேசவே இல்லை. இந்த விவகாரம் ஒரு அராஜகம். போலீசார் குடும்பத்தை கட்டாயப்படுத்துகின்றனர் என பெற்றோர்கள் குழுவிடம் கூறியுள்ளனர்’ என விஜய சாந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!

‘முதல்வர் யாரை காப்பாற்ற நினைக்கிறார்? அவர் ஏன் பேசவில்லை? திமுக மாறவில்லை, அப்படியே தான் உள்ளது. அந்த மாணவிக்கு ஏன் நியாயம் கிடைக்கவில்லை? இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டுகளாக திமுகவின் தொண்டர். அவருக்கே நியாயம் இல்லை.’ என அவர் மேலும் கூறியுள்ளார். 

பா.ஜ.க யாரையும் தூண்டி விடவில்லை என்றும் இந்த பிரச்சனை பலர் அரசியல் ஆக்குகின்றனர்‌ என்றும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர். ’வீடியோவில் மாணவியே அனைத்தையும் கூறியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?’ என அவர் கேள்வி எழுப்பினார்.

‘யாரும் இங்கு அரசியல் செய்யவில்லை. மாணவி பேசிய விடியோ பொய்யா? மாணவி குடும்பத்திற்க்கு அரசு ஒரு கோடி தரவேண்டும். ஆளும் கட்சியினர் இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணவேண்டும். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.’ என்றார் விஜயசாந்தி.

ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News