வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்பபுரத்தை சேர்ந்த குமரன் (34) என்பவர் இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் குமரன் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். நாளடைவில் தற்பொழுது அந்த சிறுமிக்கு 6 வயது ஆகின்றது. அதன்படி தனது 6-வயது மகளான சிறுமிக்கு குமரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ALSO READ | கொலையில் முடிந்த வாய்த்தகராறு! கணவரே மனைவியை கொன்ற விபரீதம்!
இதையடுத்து அந்த சிறுமி வெளியில் சொல்லாமல் இருக்க பெல்ட் தாக்கி இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை சித்ரவதை செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
சிறுமியை அனைத்து உண்மைகளையும் கூறியதன் அடிப்படையில் உடனடியாக காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து குமரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அத்துடன் அவரது வீட்டில் இருந்த சிறுமியை தாக்கிய பெல்ட் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சித்திரவதை செய்தது காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
மேலும் குமரன் மீது வேலூர் மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குமரன் மீது குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR