ஓய்வூதியதாரர்கள் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 06:54 PM IST
ஓய்வூதியதாரர்கள் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி வருகிறது. 

இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் (Pensioner) உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க காலவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு (TN Govt) அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றை ஜுன் 30ம் தேதி வரை சமர்ப்பிக்க விலக்களித்துள்ளது. 

ALSO READ | EPFO: பணியில் இருந்து விலகிய பின் PF இல் வட்டி எவ்வளவு காலம் கிடைக்கும்

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு (Government employees) மாதந்தோறும் தமிழக அரசின் கருவூலத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றை கருவூலத்துறைக்கு சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் ஜுன் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்திற்குள் வாழ்நாள் சான்றை சமர்பிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டித்துக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியதாரர்கள் ஒரு சில சான்றிதழ்களை அதிகாரியிடம் ஜுன் 30ம் தேதிக்குள் சமர்பிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஜுலை அல்லது செப்டம்பர்  மாதத்தில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றை சமர்பிக்க வேண்டும் இல்லையெனில் ஜுலை மாதத்தில் அதிகாரியிடம் சான்றிதழை நேரில் ஆஜராகி சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News