மூன்றே நாளில் வழுக்கையை ஏற்படுத்தும் மர்ம வைரஸ்... அதிர்ச்சியில் கிராம மக்கள்

HMPV வைரஸ் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானாவில், தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஒரு  விசித்திரமான நோய் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 13, 2025, 05:42 PM IST
  • திடீரென முடி உதிர்தல், வழுக்கை போன்ற பிரச்சனைகளால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • கூந்தல் பராமரிப்பதற்கான டிபஸ்.
  • புல்தானா மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.
மூன்றே நாளில் வழுக்கையை ஏற்படுத்தும் மர்ம வைரஸ்... அதிர்ச்சியில் கிராம மக்கள் title=

HMPV வைரஸ் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானாவில், தலையில் வழுக்கையை ஏற்படுத்தும் ஒரு  விசித்திரமான நோய் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்படும் வினோதமான சம்பவத்தால் மூன்று கிராமங்களில் பீதி நிலவுகிறது. திடீரென முடி உதிர்தல், வழுக்கை போன்ற பிரச்சனைகளால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

புல்தானா மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் சுமார் 30 முதல் 40 பேர் முடி அதிகம் உதிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சில சமயங்களில் சில நாட்களில் முடி முழுவதுமாக உதிர்ந்துவிடும்.  திடீரென முடி உதிர்ந்து போகும், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

மர்ம நோயால் பாதிக்கப்பட பலருக்கு, தலையில் திடீரென  அரிப்பு ஏற்பட்டு, முடி உதிர்வதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், பாண்ட்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா கிராமங்களுக்குச் சென்று, நோயாளிகளைப் பரிசோதித்து, இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டனர். 

கடந்த 10 நாட்களாக மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி வேகமாக உதிர்வதாகவும் கூறப்படுகிறது, தலை முடி மட்டுமல்ல தாடியும் உதிர்ந்து வருகின்றன. மூன்று கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள  சரும பராமரிப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

மர்ம நோய் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர்  கூறுகையில், முதற்கட்ட விசாரணைக்காக சரும நோய் நிபுணர் மற்றும் தொற்றுநோய் நிபுணரை கிராமத்திற்கு அனுப்பி வைத்ததாகவும்,. கிட்டத்தட்ட 99 சதவீத பாதிப்புகளில் உச்சந்தலையில் பூஞ்சை தொற்று காணப்படுகிறது என்றும் இதனால் தலைமுடி உதிர்கிறது என்றும் கூறினார். அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில், பூஞ்சை தொற்றுகளை கனரக உலோகங்கள் உள்ளதா என்பதையும் சோதிப்பதாக கூறினார். 2 முதல் 4 நோயாளிகளின் சரும மாதிரிகளை எடுத்து மைக்ரோஸ்கோப்பிக்காக அகோலா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மாதிரிகளின் சோதனை இரண்டு அல்லது மூன்று நாட்களில் வரும் என்றும் கூறினார். 

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க

கூந்தல் பராமரிப்பதற்கான டிபஸ்

1. தினமும் தலைக்கு குளிக்கக் கூடாது: இயற்கை எண்ணெய்கள் தலையில் நீங்காமல் இருக்க, உங்கள் தலையை வாரத்திற்கு 2-3 முறை மட்டும் கழுவவும்.

2. கூந்தலுக்கான ஸ்க்ரப் பயன்படுத்தவும்: இறந்த சரும செல்களை அகற்ற சில வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் தலையை ஸ்க்ரப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.

3. வாரத்திற்கு ஒரு முறைஅ தலையை மசாஜ் செய்யவும்: இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் தலையை வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் மசாஜ் செய்யவும்.

4.கடுமையான ரசாயனங்களைத் தவிர்க்கவும்: சல்பேட் இல்லாத ஷாம்புகளைத் தேர்வுசெய்து, ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்க ரசாயனங்கள் பொருட்கள் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிக்கன் vs மட்டன் எது உடலுக்குச் சிறந்தது? அதிகமாகச் சாப்பிட வேண்டியது எது..குறைவாகச் சாப்பிட வேண்டியது எது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News