Weight Loss Mistakes: ஆர்வ கோளாறில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தை காலி செய்து விடும்

எடை இழப்பு பயணம் மிகவும் கடினமானது. இதில் பல வகையான தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மிகவும் பொதுவான சவால்களில் ஒன்று, டயட் அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கும் போது உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது.

துரித எடை இழப்பு உடலில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எடையைக் குறைப்பதற்கும் எடையை பராமரிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நிலையான எடை இழப்பிற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

1 /10

உடல் எடையை குறைக்க சீரான உணவு, உடற்பயிற்சி முறை, நல்ல தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவை தேவை. ஆனால், ஆர்வ கோளாறு காரணமாக தெரியாமல், பல நேரங்களில் உடனடி பலன்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பல தவறுகளை நாம் செய்கிறோம்.

2 /10

பொதுவாக நாம் செய்யும் தவறுகள் காரணமாக எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்குவதோடு, கூடவே, உடல் பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட சில தீவிர உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம். இதனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

3 /10

தீவிர டயட்: ஆர்வக் கோளாறு காரணமாக, சிலர் மிகவும் கடுமையான டயட்டை பின்பற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் உடல் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்கொள்கிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து மற்றும் எடை இழப்பு முயற்சிக்கு தீங்கு விளைவிக்கும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே டயட் முறையை பின்பற்றுவது தவறு.

4 /10

மருந்துகளை பயன்படுத்துதல்: பலர் எடை இழப்புக்கு டயட் மாத்திரைகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உட்கொள்கிறார்கள். இருப்பினும், அவற்றினால கிடைக்கும் பலன் பெரும்பாலும் தற்காலிகமானது. மேலும் இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.

5 /10

உப்பு மற்றும் சர்க்கரை: நீங்கள் உண்ணும் உணவுகளில்  சர்க்கரை மற்றும் சோடியம் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்க்கவும் .அதிக உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்வது எடை இழப்பு முயற்சியை பாழாக்குக். இது உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்துவதோடு, உடல் எடையை குறைப்பதை கடினமாக்குகிறது.

6 /10

பழங்கள் மற்றும் நட்ஸ்கள் போன்றவை ஆரோக்கியமான உணவுகள் தான். ஆனால், கலோரிகள் அதிகம் கொண்ட இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை குறையாது. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும், எடை குறைப்பின் போது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

7 /10

தூக்கமின்மை: போதுமான தூக்கம் இல்லாத நிலை எடை இழப்பு முயற்சியை பெரிதும் பாதிக்கலாம். தூக்கமின்மை உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இது பசியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது.  

8 /10

நீர் உட்கொள்ளல்:  உடலில் நீர் சத்து பற்றாக்குறை உடலில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கும். உடல் எடையை குறைக்கும் போது உடலில் நீர் சத்து குறையாமல் வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் இது கொழுப்பை எரிக்க உதவுகிறது.

9 /10

மன அழுத்தம்: அதிக அளவு மன அழுத்தம் எடை இழப்பை பாதிக்கும். ஏனெனில் இது கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இது கொழுப்பு சேர உதவுகிறது, குறிப்பாக அடிவயிற்றில் கொழுப்பு சேரும். யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.