எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன் - புரட்சித் தலைமகன் பழனிசாமி புலம்பல்

இரட்டைத் தலைமையால் எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன் என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 02:57 PM IST
  • இடைக்கால பொதுச்செயலாளரானார் பழனிசாமி
  • அவருக்கு புரட்சித் தலைமகன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது
 எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன் - புரட்சித் தலைமகன் பழனிசாமி புலம்பல் title=

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  நீண்ட நாள்களாக நடந்துவந்த ரேஸில் ஓபிஎஸ்ஸை பின்னுக்கு தள்ளி பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

அவருக்கு ‘புரட்சித் தலைமகன்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இன்று காலை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்தபோதே பன்னீர்செல்வத்திடம் பேசினோம். ஆனால் அதற்கு அவர் கொஞ்சம்கூட இசைவு கொடுக்கவில்லை.

Palanisamy

இரட்டைத் தலைமையால் எவ்வளவு தெரியுமா கஷ்டப்பட்டேன். அது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒற்றைத் தலைமை என்ற குரல் எழுந்த சூழலில் அது தற்போது நிறைவேறியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எதற்கெடுத்தாலும் விட்டுக்கொடுத்தோம் என்று சொல்கிறார். உண்மையில் நாங்கள்தான் விட்டுக்கொடுத்திருக்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க | அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்

முன்னதாக, பொதுக்குழு நடத்த தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே கடுமையான மோதல் எழுந்தது. அதில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. 

 

நிலைமை இப்படி இருக்க தன்னை நீக்குவதற்கு இபிஎஸ்ஸுக்கும், முனுசாமிக்கு அதிகாரம் இல்லை நான் அவர்களை நீக்குகிறேன் என கூறிவிட்டு தலைமை அலுவலகம் சென்றார் ஓபிஎஸ். 

 

இதனையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான சூழலில் வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து பன்னீரும், அவரது ஆதரவாளர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News