நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கேரள, கர்நாடக எல்லை சோதனை சாவடிகளில் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கோடை சீசன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகின்றன. இதனால் கடும் வாகன நெரிசல், சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா தளங்களை எளிதாக காணமுடியாத நிலை, போதிய வாகன நிறுத்த வசதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் குவியும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!
இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் பெற வழி நெறிமுறைகளை வெளியிட்டது. மேலும் இ-பாஸ் பெற இணையதளம் முகவரியும் நேற்று காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதில் முதல் நாளான நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. வெவ்வேறு தேதிகளில் பயணிக்க சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் இ-பாஸ் பெற்றுள்ள நிலையில் முதல் நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்தனர். குறிப்பாக கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை செய்யப்பட்டனர்.
நீலகிரிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் நாடுகாணி, சோலாடி, நம்யார்குன்னு, பாட்டவயல் போன்ற சோதனை சாவடிகளிலும், கர்நாடகா எல்லையிலுள்ள கக்கனல்லா, தொரப்பள்ளி சோதனை சாவடிகளிலும், கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக உதகை வருவோர் கல்லாறு சோதனை சாவடிகளிலும், கோத்தகிரி வழியாக வரும் சுற்றுலா வாகனங்கள் குஞ்சப்பணை சோதனை சாவடிகளிலும் அதிகாலை முதலே இ-பாஸை அதிகாரிகள் சோதனை செய்தனர். நீலகிரிக்கு வர பூர்த்தி செய்யப்பட்ட இ-பாஸில் பெயர் /தொலைபேசி எண்கள், முகவரி, ஒரு வாகனத்தில் எத்தனை பேர் வருகின்றனர், அவர்கள் எத்தனை நாட்கள் தங்குகின்றனர், எப்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் போன்ற விபரங்கள் சரிபார்த்த பின்பு சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுக்களாக இணைந்து இ-பாஸ் சோதனை செய்து சுற்றுலா பயணிகளை அனுமதித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரிக்கு வர முதல் நாளான நேற்று மட்டும் இணையதள முகவரியில் 21, 446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளனர். அதேபோல் இன்று முதல் ஜூன் 30 வரை வெவ்வேறு தேதிகளில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு பயணிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ