துபாய் சர்வதேச யோக போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களுக்கு வரவேற்பு

Dubai Yoga International Competition: சர்வதேச யோக போட்டி- தங்கம் பதக்கம் வென்று சாதனை..இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2023, 08:21 AM IST
  • துபாயில் தங்கம் வென்ற கோவை மாணவர்கள்
  • யோகா போட்டிகளில் சாதிக்கும் தமிழக மாணவர்கள்
  • தங்கத் தாரகைகளுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
துபாய் சர்வதேச யோக போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களுக்கு வரவேற்பு title=

கோவை: துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில்  தங்க பதக்கங்களை வென்று கோவை திரும்பிய  மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரங்கனைகளுக்கு  சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது.

கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி (2023 மே 8 - 12) வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா,மஸ்கட், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

துபாயில் நடத்தப்பட்ட யோகா போட்டிகளில், சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில்  மயூர் ஆசனம், திருவிக்கிரம் ஆசனம், சிரசாசனம்,பூரண ஸலபாசனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க | Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

துபாய் சரவதேச யோகா போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களான  கனித்ரா, தேவகர்ஷன், திவித் மற்றும் கல்லூரி மாணவர் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் தங்கப்பதக்கங்களை வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர்.

யோகா போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு, கோவை ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்... வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?

மே 8 ஆம் தேதியன்று, துபாயில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதிப் போட்டிகள், சில மாதங்களுக்கு முன்னதாக ஜனவரி மாதம் கோவையில் நடைபெற்றன.

கோவை பிரணா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில், கோவை ஓசோன் யோகா மையம், சுப்ரா யோகா மையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். மூன்று வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கார் லோன் வாங்க போறீங்களா.... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News