திமுக-வில் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை..... ஒரு அலசல்

திமுகவில் ஸ்டாலின் முக்கியத்துவம் என்ன.. அவரை கட்சியில் கடந்த வந்த பாதைகள் எப்படி.. என்பதை பற்றி ஒரு அறிக்கை.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 14, 2018, 01:02 PM IST
திமுக-வில் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை..... ஒரு அலசல் title=

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் மாலை 6.10 மணியளவில் காலமானார். அடுத்த நாள் ஆகஸ்ட் 8 அன்று இரவு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணாவின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

70 ஆண்டுகால அரசியல் அனுபவம், 50 ஆண்டுகால திமுக தலைவர், 5 முறை ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் பதவி, இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வி என்பதே இல்லை, இப்படி பல சாதனைகளை கொண்ட கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக-வை யார் வழிநடத்துவது  யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வருவதை தவிர்க்க முடியாது. 

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என செயற்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவில் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு பரிச்சயமான முகமா? என்றால், இல்லை. ஆனால் தற்போது திமுகவில் மக்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் பரிச்சயமான முகம் என்றால் அது மு.க. ஸ்டாலின் தான். கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பில் தொடங்கி, இன்று தமிழக எதிர்கட்சி தலைவராக உயர்ந்துள்ள ஸ்டாலின், படிப்படியாக தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டே வந்துள்ளார். 

கருணாநிதிக்கு பின்பு திமுக-வின் அடுத்த அடையாளம் என்று பார்த்தால், அது மு.க. ஸ்டாலின் தான். அவர் திமுகவின் தலைவர் பதவிக்கு பொருத்தமானவரா என்பதை திமுக தொண்டர்களும், மக்களும் தான் முடிவு செய்ய முடியும். அதற்கு முன்பு ஸ்டாலின் கட்சியில் கடந்த வந்த பாதையை கொஞ்சம் அலசுவோம்.

மு.க. ஸ்டாலின் தேர்தல் கள வரலாறு: எத்தனை வெற்றிகள்? எத்தனை தோல்விகள்?

மு.க ஸ்டாலின் என்று அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1 நாள் பிறந்த அவர் பள்ளி பருவத்திலேயே கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி பொதுப்பணி மற்றும் சமூகப்பணிகளை செய்து வந்தார். இப்படி படிப்படியாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்டாலின், 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு பல இன்னல்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் நன்கு அறியப்பட்டார். 

1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி அமைப்பு உருவானது. அதில் உறுப்பினராக இருந்த ஸ்டாலின், 1984 ஆம் ஆண்டு திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 

கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் அடையாளம் மு.க. ஸ்டாலின்

முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் 1984 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் தனது முதல் தேர்தலில் தோல்வி அடைகிறார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டார். இம்முறை அவர் வெற்றி பெற்றார்.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் தோல்வியுற்றார். 

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்த முறை அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 69.72 சதவீத ஓட்டுக்களை பெற்றார். இது தான் ஸ்டாலின் அதிக ஓட்டு சதவீதமாகும். 

அதன் பிறகு நடைபெற்ற 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி வாகை சூடினார். 

2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் மு. க. ஸ்டாலின்.

அதேபோல 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். பின்னர் 2001 ஆம் ஆண்டு மீண்டும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி மேயரானார். ஆனால் "ஒருவர் ஒரு பதவி தான் வசிக்க வேண்டும்" என 
அரசு கூறியதால், மாநகராட்சி பதவியை துறந்தார்.

2006 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டு துணை முதல்- அமைச்சர் பதவி மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழக எதிர்கட்சி தலைவராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

இத்தனை நாட்களாக ஸ்டாலின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் மீது மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது. திமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Trending News