தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியமைக்கு திமுக MP கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்!
முன்னதாக, தாய்லாந்து சென்ற பிரதமர், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். இதுகுறித்து தமிழக பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது.
தமிழக பாஜக-வின் இந்த செயலுக்கு திராவிட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்.#திருவள்ளுவர் pic.twitter.com/UWg4YpVBD8
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 4, 2019
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்று விடியற்காலை 4.30 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த சில சமூகவிரோதிகள், திருவள்ளுவர் சிலை மீது சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர். தமிழர்கள் போற்றும் திருவள்ளுவரை அவமதிக்கும் விதமாக சில சமூக விரோதிகள் செய்த இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் திமுக MP கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால் அதை செய்த மூடர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்.#திருவள்ளுவர்" என குறிப்பிட்டுள்ளார்.