TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!

திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2021, 01:02 PM IST
  • கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. - மு.க. ஸ்டாலின்
  • திமுக ஒரு அடக்க முடியாத யானையைப் போன்றது - மு.க. ஸ்டாலின்
  • கவர்னர் உறை ஒரு டிரைலர் தான், இன்னும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன - மு.க. ஸ்டாலின்.
TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!  title=

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் 21 ஆம் தேதி தொடங்கியது. இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக, பல மக்கள்நலப் பணிகளை செய்து முடிக்க முழு முனைப்புடன் இருக்கிறது. தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை போன்றது. யானைக்கு அதன் நான்கு கால்கள் தான் பலம். அதுபோல, சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவற்றை நான்கு கால்களாகக் கொண்டு அதன் பலத்தில் திமுக செயல்படும் என மு.க.ஸ்டாலின் கூறினார். 

கலைஞரின் தொடர்ச்சி நான்....
பல முக்கிய விஷயங்களைப்ப் பற்றியும், திமுக-வின் உறுதிப்பாடுகளைப் பற்றியும் இன்று ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில், நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா இருந்ததாகவும், அண்ணாவின் தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி இருந்தார் என்றும், அவரது தொடர்ச்சியாக நான் இருப்பேன் என்றும் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உறுதிபடக் கூறினார்.

கவர்னர் உறை ஒரு டிரைலர் தான்.... 
கூட்டத்தொடரின் முதல் நாள் கவர்னர் ஆற்றிய உரை ஒரு டிரைலர் தான் என முதல்வர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த திமுக பல திட்டங்களை வைத்திருப்பதாகவும், அவை அனைத்தையும் கவர்னரின் ஒரே உரையில் சொல்லி விட முடியாதென்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

அடக்க முடியாத யானை திமுக....
யானை பலசாலியான விலங்கு என்றாலும், அதன் நான்கு கால்கள்தான் அதன் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன. திமுக-வும் (DMK) ஒரு யானையைப் போன்றது. சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவற்றை நான்கு கால்களாகக் கொண்டுள்ள இந்த யானையை அடக்க முடியாது என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார்...
கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை ஊரடங்கு மற்றும் இன்னும் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தோம். கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்று உறுதிபடக் கூறினார் மு.க.ஸ்டாலின். 

தன் மீது மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர், கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். 

ALSO READ: TN Govt: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலையை எதிர்த்தவர் மீதான வழக்கு வாபஸ்

தாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தொடரில் இரு தினங்களாக, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்றும், அவர்களது கருத்தை தான் அறிவுரையாக எடுத்துக்கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்தார். "பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்." என்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்கள்ளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது, அந்த போராட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்பதை முதல்வர் நினைவுபடுத்தினார். அதேபோல், மீத்தேன், நியூட்ரினோ எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். 

கடந்த ஆட்சியிலேயே கொரோனா தொற்று உட்பட பல முக்கிய பிரச்சனைகளில் தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை தான் கூட்ட சொன்னதாகவும், ஆனால் அந்த அரசு அதை ஏற்கவில்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு காண்பித்த அலட்சியப் போக்கால் கொரோனா தொற்று அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீவிரமாக ஊரடங்கு (Lockdown) செயல்படுத்தப்பட்டதால், 36,000-ஐத் தாண்டிச் சென்ற தொற்றின் அளவு 7,000 ஆக குறைந்துள்ளது என்றார் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

ALSO READ: Federal Government: மத்திய அரசை ஒன்றிய அரசாக மாற்றுவதன் பின்னணி என்ன? குஷ்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News