கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனபள்ளி வனப்பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மருத்துவர் லோகேஷ் தமைமையிலான கிருஷ்ணகிரி அகழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கொவிந்தராஜ், தமிழ் செல்வன், பிரதிப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிகரமாகனபள்ளி வனப்பகுதியில் மிகப் பெரிய பாறை ஒன்றில் கல்வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கல்வெட்டுகள் ஆறு துண்டுகளாக உடைக்கப்பட்டு சிதிலமடைந்து இருந்த நிலையில், இந்த கல்வெட்டுகளை ஒருங்கிணைத்த அகழ்வாராய்ச்சி ஆய்வுக்குழுவினர் அதனை ஆய்வுப்படுத்தினர். அந்த கல்வெட்டில் சுமார் 781 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் சுமார் 1241 ஆம் ஆண்டு சோழ வம்சத்தில் மூன்றாம் ராஜராஜனும், ஒய்சாள மன்னனும், சோமேஸ்வரன் மன்னனும் இப்பகுதி மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் இந்த மூன்று மன்னர்களின் தலைமை ஏற்காமல் பூர்வாதராயன் அத்தியாண்டையான் மகன் தாமத்தாழ்வார் மன்னன் இந்த இடத்தை சுதந்திரமாக ஆட்சி செய்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | தாஜ்மஹாலின் 22 அறைகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் ASI வெளியிட்டுள்ள படங்கள்
மேலும் இந்த கல்வெட்டில், இங்கு அமைந்துள்ள கங்கை கொண்ட ஈஸ்வரன் என்ற பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது என்றும் இந்த கோவிலை சிதலமடைந்து இருந்ததை மன்னன் புதிப்பித்து 100 ஏக்கர் நிலம் தானம் வழங்கியதும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அருகே 1000 வருடங்கள் பழமைவாய்ந்த நடுங்கலும், பாறை ஓவியங்களும், கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கல்வெட்டுகள் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு குழுவினர் மேலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் கோயில், ஞானவபி மசூதியில் அகழ்வாராயச்சிக்கு நீதிமன்றம் அனுமதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR