பள்ளி மாணவியை கடத்திய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.  

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 28, 2022, 06:13 PM IST
  • பள்ளி மாணவி இரண்டு மாதம் கர்ப்பம்
  • ஆசை வார்த்தை கூறி எல்லை மீறிய வாலிபர்
  • மாணவியை கடத்தியவர் போலீசில் கொடுத்த வாக்குமூலம்
பள்ளி மாணவியை கடத்திய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது..! title=

சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு காந்தி நகரைச் சேர்ந்தவர் 24 வயதான சரவணன். டான்ஸ் மாஸ்டராக உள்ளார். எடப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டி பழைய பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு சிறுமியின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறுமிக்கு நடனம் கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார், சரவணன். அதன்பின்னர், சிறுமியின் குடும்பத்தினருடனும் சரவணன் நெருங்கிப் பழகியிருக்கிறார். மகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்தவர் தானே என்ற முறையில் அவர்களும் வீடு வரை சரவணனை அனுமதித்துள்ளனர். அது தான் பாதகமாகப் போனது. சிறுமியிடம் நெருங்கி பழக ஆரம்பித்தவர் எல்லை மீறியிருக்கிறார். திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பம் ஆனார். இதற்கிடையே, சம்பவத்தன்று இரவில் வீட்டில் படுத்துறங்கிய சிறுமி விடிந்ததும் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த தகவல்கள் கிடைக்காமல் போனது.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். அதில் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் டான்ஸ் மாஸ்டர் சரவணம் மீது சந்தேக பார்வை விழுந்தது. மறுநாள் அது உறுதியானது. தேடிப் பிடிப்பதற்குள் சிறுமியுடன் சரவணன் எடப்பாடி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அப்போது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவரை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். மாணவிக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதால் இந்த வழக்கை பற்றி விசாரிக்க சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தனர். 

sexual harassment case

மேலும் படிக்க | பிரபல ரவுடி முத்துப்பாண்டி வெட்டிக்கொலை..!

சங்ககிரி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார். அதில் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் கற்றுக் கொடுக்கும் போது நெருங்கிப் பழகி வீடுவரை வந்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது, இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Arrest

தொடர்ந்து அவரை கைது செய்து சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வீடியோ: கழிவறையை சுத்தம் செய்யும் 1-ம் வகுப்பு மாணவி! ஈரோடு பள்ளியில் நடக்கும் கொடூரம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News