COVID-19 Update: நவம்பர் 3 தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,176ஆக உயர்ந்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2021, 08:21 PM IST
COVID-19 Update: நவம்பர் 3 தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் title=

சென்னை:  தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கோவிட் பாதிப்பு தொடர்ந்து மட்டுப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் 962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்புடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,05,548 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் நோய்க்கு சிகிச்சை பலனின்றி 19 பேர் இறந்தனர். இன்றைய பலி எண்ணிக்கையுடன் சேர்த்து  தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,012 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,176 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) கோவிட் நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த 1,078 பேர் இன்று குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,58,360 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 1,15,237 கொரோனா பரிசோதனை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.  

இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் உலக சுகாதார மையம் இன்று சேர்த்துள்ளது. இது, கொரோனா கட்டுப்பாட்டில் ஊக்கம் தரும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Read Also | அவசரகால பயன்பாட்டிற்காக கோவேக்சின் தடுப்பூசியை WHO அங்கீகரித்தது!

இன்றைய நிலவரம்: 

• இன்றைய பாதிப்பு - 962

• இன்றைய மரணங்கள் - 19

• மொத்த பாதிப்பு - 27,05,548

• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,078

• இன்றைய சோதனைகள் - 1,15,237

ALSO READ |  Health Alert! வந்துக் கொண்டேயிருக்கிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News