Corona Symptoms Medication- மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மருந்தகங்களில் கொரோனா தொற்று அறிகுறிக்காக ஒரு சில மாத்திரைகள் அதிகளவில் விநியோகிப்பதாக சென்னை மாநகராட்சிக்கு புகார் எழுந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 06:31 AM IST
  • தமிழகத்தில் புதிதாக 20,418 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • சென்னை மாநகராட்சிக்கு பகீர் புகார்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 27,005 பேர் பலி
Corona Symptoms Medication- மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு title=

கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக மட்டுப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயங்கரமான தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள மருந்தகங்களில் கொரோனா தொற்று (Corona Infection) அறிகுறிக்காக பாரசெட்டமல், அசித்ரோமைசின் போன்ற மாத்திரைகள் அதிகளவில் விநியோகிப்பதாக சென்னை மாநகராட்சிக்கு (Chennai Corporation) புகார் எழுந்ததுள்ளது. அதன்படி, கொரோனா தொற்று அறிகுறிக்காக மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் அனுப்பி வைக்க மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ | CoWIN in Tamil: இரு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும்: மத்திய அரசு விளக்கம்

மேலும் இந்த விவரங்களை gcopytpharmacyreports@chennalcorporation.gov.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் நோடல் அலுவலர்களை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் புதிதாக 20,418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் 33,161 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை 22 லட்சத்து 16 ஆயிரத்து 812 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.  சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களைத் தவிர தற்போது மாநிலத்தில் 2,44,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 27,005 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 33,161 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 19,65,939 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,74,982 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,87,21,659 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,44,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ | காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News