பாஜக-விற்கு 5 தான்; காங்கிரஸுக்கு 10 வரை கிடைக்குமாம்...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Feb 20, 2019, 09:45 AM IST
பாஜக-விற்கு 5 தான்; காங்கிரஸுக்கு 10 வரை கிடைக்குமாம்... title=

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது!

நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டும் நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் நேற்று முதல் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது.

அந்தவகையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்குவதற்கான கூட்டணி உடன்பாடு நேற்று கையெழுத்தானது. மேலும் இக்கூட்டணியில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தர் பச்சமுத்து தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இணைவது உறுதியாகியுள்ளது. 

தொடர்ந்து இக்கூட்டணியில் தேமுதிக-வை இணைப்பதற்கான முயற்சிகளும் நடைப்பெற்று வருகிறது.

இதற்கிடையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது.

எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, இன்று மாலை 3 மணியளவில் சென்னை அறிவாளயத்தில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News