மகாராஷ்ட்ராவில் பாஜக-வின் தில்லு முல்லு CPI(M) கண்டனம்!

மகாராஷ்ட்ராவில் பாஜக-வின் அரசியல் தில்லு முல்லு, இந்திய ஜனநாயகத்தில் கருப்புப்புள்ளி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Last Updated : Nov 23, 2019, 05:39 PM IST
மகாராஷ்ட்ராவில் பாஜக-வின் தில்லு முல்லு CPI(M) கண்டனம்! title=

மகாராஷ்ட்ராவில் பாஜக-வின் அரசியல் தில்லு முல்லு, இந்திய ஜனநாயகத்தில் கருப்புப்புள்ளி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக., அக்கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,  மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதவியேற்றுள்ள முறை, பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மிக கீழ்த்தரமான, நெறியற்ற நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடிய கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பாரபட்சமற்று இயங்க வேண்டிய குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரை தன்னுடைய அதிகார வெறிக்காக பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும், சட்டவிதிகளையும் காலில் போட்டு மிதித்து பாஜக செயல்பட்டுள்ளது. மிக கேவலமாக பாரதிய ஜனதா கட்சி திரைமறைவு, தில்லுமுல்லுகளை மகாராஷ்ட்ரா அரசியலில் அரங்கேற்றியுள்ளது.

ஏற்கனவே, கோவா, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் செய்த ஜனநாயகப் படுகொலையை மகாராஷ்ட்ராவிலும் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் கருப்புப் புள்ளியாக பாஜக நிகழ்த்தியுள்ள இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டன குரலெழுப்பிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Trending News