கோவையிலிருந்து சீரடி சாய் பாபா கோவில் செல்லும் தனியார் ரயில்: இயக்கம் இன்று துவக்கம்

கோவையிலிருந்து பிரசித்தி பெற்ற சாய் பாபா கோவில் அமைந்துள்ள சீரடிக்கு இன்று முதல் தனியார் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 11:42 AM IST
  • கோவை சீரடி ரயில் இன்று முதல் துவக்கம்.
  • தனியார் நிறுவனம் இந்த ரயிலின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.
  • இன்று மாலை 6 மணிக்கு ரயிலின் முதல் இயக்கம்.
கோவையிலிருந்து சீரடி சாய் பாபா கோவில் செல்லும் தனியார் ரயில்: இயக்கம் இன்று துவக்கம் title=

கோவையிலிருந்து பிரசித்தி பெற்ற சாய் பாபா கோவில் அமைந்துள்ள சீரடிக்கு இன்று முதல் தனியார் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பாரத பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்ததன் அடிப்படையில் கோவையிலிருந்தும் இரயில் இயக்கப்படுகின்றது.

இந்த சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு, ரயிலின் பராமரிப்பு பணிகள் என அனைத்தையும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கும். 

கோயம்பத்தூரிலிருந்து சீரடி செல்லும் இந்த ரயில் போத்தனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. 

உணவு வசதிகள், படுக்கை வசதிகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தெற்கு ரயில்வே மூலம் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | Indian Railways: ஜூலை 1 முதல் ரயில்வேயில் புதிய விதிமுறைகள் 

ரயிலில் பயண அட்டவணை:

- இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாளை புதன்கிழமை மதியம் மந்திராலயத்தை சென்றடைகிறது.

- இந்த ரயில் மாலையில் சீரடியை சென்றடைகிறது. 

- இரவு ஓய்வெடுத்த பின்னர், வியாழக்கிழமை காலை சீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 

- வியாழன் மாலை சீரடியிலிருந்து ரயில் புறப்படும், வெள்ளிக்கிழமை மாலை கோவை வந்து சேரும். 

கோவையில் துவங்கி சீரடி சென்று மீண்டும் கோவை திரும்பும் இந்த ரயில், வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார்  நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த நிலையில் ரயிலை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தி வருகின்றனர். 

முதன் முறையாக தனியார் ரயிலை இயக்குவதனால் அலங்கார பணிகளும் நடந்துவருகின்றன. ரயில் மஞ்சள் , நீலம் நிறங்களில் வண்ணம் பூசியிருக்கின்றனர். இரயில் பெட்டியின் உட்பகுதியில் பேப்பர்கள் ஒட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுவருகிறட்து. தனியாரின் கீழ் சீரடிக்கு முதல் சேவை இன்று ஆர்ம்பவாதனால் ரயில் புது பொழிவுடன் அலங்கரித்து வருகின்றனர். 

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு வழக்கமாக ஸ்லீப்பர் கட்டணம்  1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 2,360 ரூபாயாக உள்ள நிலையில் தனியார் கட்டணம் 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய் ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 8,190 ரூபாயாக உள்ள நிலையில் தனியார் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கபட்டு ரயில் இயங்குகிறது. 

அதிக கட்டண நிர்ணயம் எளியோருக்கு ரயில் சேவை எட்டாக் கனியாக மாறியிருக்கின்றது.

மேலும் படிக்க | IRCTC Train Ticket Reservation: இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News