கோவையில், பெயிண்ட் அடிக்கும் பணியின் போது உயிரிழந்த நபர் ஒருவரை சாலையில் சேர் போட்டு அமர வைத்து விட்டுச் சென்ற கொடூரம் நடைபெற்றுள்ளது.
பெயிண்ட் அடிக்கும் போது உயிரிழந்த நபர்
கோவையை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி, முரளி. கோவையில் உள்ள வடவள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தார். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், சிலர் உயிரிழந்த பெயிண்டரை தூக்கி அபார்ட்மென்ட்க்கு வெளியே உள்ள சாலையில் சேர் போட்டு அமர வைத்து, அவர் மீது போர்வையை போர்த்தியுள்ளனர்.
மனிதநேயமற்ற செயல்..
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் உயிரிழந்தவர் உடல் என்ன ஆனது? என்பது குறித்து அபார்ட்மென்ட்டில் வசிக்கும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. உயிரிழந்த நபர் குறித்து கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் கோவில்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்-நெகிழியை தவிர்க்க புதிய ஏற்பாடு
போலீசார் வருகை
உயிரிழந்த நபரின் உடலை தூக்கிச்செல்லாவிட்டாலும், குறைந்த பட்ச மனித நேயம் கூட இல்லாமல் செயல்படும் நபர்களின் செயல் கொடூரமானது என்று இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணை
பெயிண்டர் முரளி உயிரிழந்ததை அடுத்து இது குறித்த தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது. கீழே விழுந்த பலியான முரளியுடன் இருந்த இரண்டு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முரளி இறந்தவுடன் அவரது உடலை இந்த நிலையில் விட்டுச்சென்றது யார் என்ற பாணியிலும் கோவை மாவட்ட போலீஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தீம் பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ