Coimbatore Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ்நாட்டில் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் தொகுதி கோவை. ஏனென்றால் அந்த தொகுதியில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் ஆசியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக கட்சியில் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் களம் கண்டனர். அதிமுகவின் மிக முக்கிய தலைவரான வேலுமணியின் சொந்த ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் தொகுதி இது. அதேநேரத்தில் ஆளும் கட்சியான திமுக, தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கோவையில் இம்முறை களம்கண்டது.
அண்ணாமலை பின்னடைவு
கோயம்புத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சமீபத்திய தகவல்களின் படி, அவர் 33997 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக சிங்கை 15594 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26741 வாக்குகளையே பெற்றுள்ளார். இந்த நிலையில், அண்ணாமலை பின்தங்கியுள்ள தகவகளை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்யாமல் இருப்பது பல தரப்பில் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய அந்த தொகுதியை திமுக இம்முறை நேரடியாக களம் கண்டதில் இருந்தே கோவை தொகுதியை எந்தளவுக்கு முக்கியமாக நினைக்கிறது என புரிந்து கொள்ள முடியும். அதனால், அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் இடமாக கோவை தொகுதி இருப்பதால், இந்த தொகுதியின் தேர்தல் முடிவுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
கோயம்புத்தூர்தொகுதியில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகள்
கோயம்புத்தூர்,
பல்லடம்,
சூலூர்,
கவுண்டம்பாளையம்,
சிங்காநல்லூர்,
கோயம்புத்தூர் (வடக்கு),
கோயம்புத்தூர் (தெற்கு)
கோவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள் - 30, 81, 594
ஆண் வாக்காளர்கள் - 15, 9, 906
பெண் வாக்காளர்கள் - 15, 71, 93
மூன்றாம் பாலினத்தவர்கள் - 595
கோயம்புத்தூர் தொகுதி 2019 மக்களவைத் தேர்தல் நிலவரம்
வெற்றி பெற்றவர் - நடராஜன் (சிபிஎம்) - பெற்ற வாக்குகள் - 571150
இரண்டாம் இடம் - சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) - பெற்ற வாக்குகள் - 392007
மூன்றாம் இடம் - மகேந்திரன் (மநீம) - பெற்ற வாக்குகள் -145104
கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்த தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்கு அதிகம் இருக்கும் தொகுதி தான். பாஜகவுக்கு நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது. எஸ்பி வேலுமணியின் செல்வாக்கில் அதிமுக களம் கண்டிருப்பதால் இந்த தொகுதியை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. ஆனால், ஆளும் கட்சியான திமுக, எக்காரணத்தைக் கொண்டு கோவை தொகுதியை இழந்துவிடக்கூடாது என தேர்தல் வேலை செய்திருக்கிறது. அதனால் இரு கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசம அளவிலேயே இருக்கின்றன. இதற்கு இடையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி பெறுவாரா? என்றால் அதிசயம் ஏதேனும் நடந்தால் வாய்ப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata