மேடையில் டபுள் மீனிங்... வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு - முழு விவரம்!

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகிய இருவரும் கட்சி கூட்டங்களின் மேடைகளில் இரட்டை அர்த்த பொருள் தரும் கருத்துகளை மாறி மாறி பேசி வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 13, 2023, 10:48 AM IST
  • திமுகவினர் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் - வானதி
  • ஆமாம் அனைத்து வீடுகளுக்கு சென்று வருகிறோம் - திமுக முன்னாள் எம்எல்ஏ
  • கோவையில் திமுக, பாஜக முக்கிய பிரமுகர்களின் வீடியோ வைரல்.
மேடையில் டபுள் மீனிங்... வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு - முழு விவரம்! title=

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 45.38 சதவீத வாக்குகளையும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39.72 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 6.68 சதவீத வாக்குகளையும் பெற்றது.

மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில், திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக, திமுக 133, காங்கிரஸ் 18, விசிக 4, சிபிஐ, சிபிஎம் ஆகியவோ தலா 2 தொகுதிகளில் வென்றன. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளை வென்றது. அதில், அதிமுக 66 இடங்களையும், பாமக 5 இடங்களையும், பாஜக 4 இடங்களையும் கைப்பற்றின. 

பாஜக நான்கு தொகுதியில் வென்றதை அடுத்து, தமிழ்நாடு அரசியல் அதிக தாக்கம் செலுத்த தொடங்கியதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். திமுக - அதிமுக என இந்த விவாதங்களை, திமுக - பாஜக என மாற்றிவிட்டு முக்கிய எதிர்கட்சியாக வலம் வருவதாகவும் கூறுகின்றனர். 

இதில், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை வந்த பின்தான் இந்த மாற்றம் என கூறப்படுகிறது. இருப்பினும், கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கடும் பலத்தில் இருக்கிறது என்பதையும் மறக்க முடியாது. கொங்கு மண்டலத்தில் திமுக அதிக இடங்களை பெறவும் தற்போது வேலை செய்து வருகிறதாக கூறப்படுகிறது. அதிமுக பக்கம் இருக்கும் கவனத்தையும், ஓட்டுகளையும் பாஜக தன்வசமாக்கிக் கொள்ளவும் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கோவை பகுதியில் திமுக - பாஜக இடையே சூடுபறக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் ஏன்?

 கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் பாஜக சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர்,"திமுக கவுன்சிலர்கள் ஆனாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனாலும் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள்.
 
திராவிட முன்னேற்ற கழகத்திற்கு என ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். இது திமுக உறுப்பினர்களின் ஜீன் அது. பாஜகவினரை அக்மார்க் என சொல்லலாம். ஒரே வீட்டில் தான் இருப்பார்கள்" என பேசியிருந்தார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் முறையற்ற தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது போல் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டியிருந்தார்கள்.

இந்நிலையில், கோவை தேர்முட்டி வீதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்ட திமுக மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மேடையில் வானதி பேசியதற்கு பதில் அளித்து பேசினார். அதில்,"நியாய விலை அட்டைகள், அடிப்படை வசதிகள் தேவை உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், அன்றாட அனைத்து வீடுகளுக்கும் சென்று கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றி வருகிறோம்" என தெரிவித்தார். கோவையில் அரசியல் கட்சியின் முக்கிய புள்ளிகள் டபுள் மீனிங் இல் மாறி மாறி பேசி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | "மகள் மரணத்துக்கு நீதி வேண்டும்" ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News