ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 10 அறிவிப்புகள் மூலம் 2,77,347 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 அறிவிப்புகள் என்னென்ன?
- மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 5035 பேருக்கு பட்டா வழங்கப்படும்
- 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை, 8000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் படிக்க | யூஜிசியின் அதிரடி அறிவிப்பினால் கலங்கிப் போன மாணவர்கள்! இனிமேலாமவது உஷாரா இருங்க
- 1,79,000 பேர் இதில் பயன்பெறுவார்கள். அதோடு 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
- 1000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40 % மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
- தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
- மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராகவும், இயந்திரம் பொறுத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு 4000 முதல் 4400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
- தங்கச்சி மடம் மீன்பிடி துறைமுகம் அமைதற்கான ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடங்கப்படும். குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் பணிக்கான ஆய்வுகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் விபத்து காப்பிடு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு நிதி 1,70,000 ரூபாயிலிருந்து 2,40,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
- மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு மற்றும் படகுகளில் பாதுகாப்பை உறுதி செய்யு தூண்டில் வலை அமைக்க கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு இருப்பதால் நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
மேலும் படிக்க | ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ