Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் 'ரியாக்ஷன்'

கொரோனா வைரசின் துரித பரவலால் இந்தியாவே ஆடிப்போயிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 9, 2021, 01:17 PM IST
  • முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'
  • மத்திய அரசின் 'ரியாக்ஷன்'
  • தமிழகத்திற்கு 475 டன் ஆக்சிஜன் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது
Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'..  மத்திய அரசின் 'ரியாக்ஷன்' title=

சென்னை: கொரோனா வைரசின் துரித பரவலால் இந்தியாவே ஆடிப்போயிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாய் பதவியேற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஆக்ஷனுக்கு மத்திய அரசின் ரியாக்ஷன் ஆக்கப்பூர்வமாய் இருக்கிறது.

தமிழக அரசின் ஆக்சிஜன் கோரிக்கைக்கு மத்திய அரசு உடனே செவி சாய்த்திருப்பது என்பது ஆச்சரியமான நிகழ்வு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை காட்டியிருக்கிறது மத்திய அரசு என்றே சொல்லலாம்.

Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம் 

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் சட்டவிரோதமாக ஆக்சிஜன் விற்கப்படும் கொடுமையும் நடக்கிறது.  

தமிழகத்திலும் தற்போது மூச்சுக்காற்றான ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிக்க   கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 நோயாளிகள் உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்தது.

ஆனால் இந்த இறப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல என மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத்துறை செயலாளரும் மறுத்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  

இப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர்பலி ஏற்படும் சூழ்நிலைக்கு தமிழகம் வந்துவிட்ட நிலையில், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன விஷயங்கள் நிலைமையின் தீவிரத்தை புரிய வைத்தன.

Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம்

ஆக்சிஜன் பற்றாகுறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மே 6ம் தேதி ஆஜரான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கான 220 டன் ஆக்சிஜன் கிடைத்தது. அதற்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறிய 475 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது தமிழகத்துக்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவை. இதே நிலை நீடித்தால் தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே 475 டன் ஆக்சிஜன் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அது மட்டுமல்ல, தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னில் 60 டன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு அனுப்பப்படுகிறது. பெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் மையத்தில் 150 டன் உற்பத்தி செய்யப்படுவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் தேவை பூர்த்தியாகிறது என்ற தகவலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து 

இதையடுத்து, "தமிழகத்துக்கு ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.

திமுக அரசு பதவியேற்ற உடனே,  தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதற்கு உடனடியாக பதிலளிக்கும் விதமாக தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. 

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக செவிசாய்த்தது ஒரு நேர்மறையான அணுகுமுறையாக இருக்கிறது.

Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News