எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது!!
நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகினார். நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையம், எஸ்.பி. வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் பழனிசாமி உடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (TRTO) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா ஆஸ்பத்திரியின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.