அரியலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு

Ariyalur Fire Cracker Accident, CM MK Stalin Talk About Ariyalur Fire Accident, MK Stalin News, பட்டாசு ஆலை தீ விபத்து, அரியலூர் பட்டாசு வெடி விபத்து நிலவரம், அரியலூர் செய்திகள், அரியலூர் விபத்து,

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2023, 04:16 PM IST
  • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.
  • தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
  • லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க நிவாரணம்.
அரியலூர் வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு title=

Ariyalur District Latest News: அரியலூர் விரகாலூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் எனவும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

இதுத்தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, "அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று அக்டோபர் 09) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்து நடைபெற்ற இடத்துக்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். 

மேலும் படிக்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - பட்டாசு கடை விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News